கோயம்புத்தூர்: மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட போடிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (22). இவரது நண்பர் மணிகண்டன்.
இருவரும் நேற்று (ஜூன்4) இரவு மறைவான இடத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் இருவருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.
இதில் மணிகண்டன் அரிவாளால் ஜீவானந்தத்தை வெட்டியுள்ளார். இதில் ஜீவானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து மணிகண்டன் உடனடியாக அங்கிருந்து தப்பியுள்ளார்.
இது குறித்து தகலறிந்து வந்த மதுக்கரை காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு குறைந்த கரோனா!