தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானப்படை அலுவலர் அமிதேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு - விமானப்படைப் பயிற்சி கல்லூரி

விமானப்படை பெண் அலுவலரை சக அலுவலர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைதான அமிதேஷை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விமானப்படை அலுவலர் அமிதேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு
விமானப்படை அலுவலர் அமிதேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு

By

Published : Oct 7, 2021, 6:55 PM IST

Updated : Oct 7, 2021, 7:16 PM IST

கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய விமானப்படைப்பயிற்சி கல்லூரியில், பயிற்சிக்காக வந்த பெண் அலுவலரை அமிதேஷ் என்ற சக அலுவலர், பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின்பேரில் அமிதேஷ் செப்டம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உடுமலைப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கானது கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது விமானப்படை அலுவலர்களும் பாதிக்கப்பட்ட பெண் அலுவலரும் ஆஜராகினர்.

அமிதேஷை விமானப்படையினர் விசாரிக்க உத்தரவு

அப்போது விமானப்படை அலுவலர்கள் கைது செய்யப்பட்ட அமிதேஷை தங்களிடம் ஒப்படைக்கும்படி கூறினர். அதே தருணம், இந்த வழக்கை மாநகர காவல்துறையினர் தான் விசாரிக்க வேண்டுமெனப் பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் கூறினார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அமிதேஷை விமானப்படையினரிடம் ஒப்படைக்க நீதிபதி திலகேஸ்வரி 30ஆம் தேதி உத்தரவிட்டார். இதனையடுத்து அமிதேஷை விமானப்படையினர் இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவின்கீழ் அழைத்துச் சென்றனர்.

விமானப்படைப் பயிற்சி கல்லூரி

7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு

இதனிடையே இன்று(அக்.07) கோவை மத்திய மகளிர் காவல் துறையினர், கோவை முதன்மை நீதிபதியிடம் கைதான அமிதேஷை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்திட அனுமதிகோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

நீதிபதி முடிவின் அடுத்தே காவல் துறையினர் விசாரணைக்கு அமிதேஷ் ஒப்படைக்கபடுவாரா என்பது குறித்து தெரிய வரும்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அலுவலருடைய நண்பரின் அறிக்கையும் 164 சிஆர்பிசியின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவரை கைது செய்திருக்ககூடாது!

Last Updated : Oct 7, 2021, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details