தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா இல்லாதவருக்கு கரோனா இருப்பதாக சான்றிதழ் வழங்கிய ஆய்வகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கோவை: கரோனா இல்லாதவர்களுக்கு கரோனா உள்ளதாக சான்றிதழ் வழங்கிய வடவள்ளிப் பகுதியில் இயங்கும் தனியார் பரிசோதனை நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

corona testing lab  vadavalli testing lab  vadavalli corona testing lab  கோவை கரோனா பரிசோதனை நிலையம்
கரோனா இல்லாதவருக்கு கரோனா இருப்பதாக சான்றிதழ் வழங்கிய ஆய்வகத்தை முற்றுகையிட்ட மக்கள்

By

Published : Sep 23, 2020, 10:26 PM IST

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் நுண்கிருமி பரிசோதனை நிலையத்தில் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் நேற்று கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது, மணிகண்டனுக்கு கரோனா தொற்று இருப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில், சந்தேகமடைந்த மணிகண்டன் அவிநாசி சாலையிலுள்ள மற்றொரு ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

அதில், அவருக்கு கரோனா தொற்று இல்லை என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மணிகண்டன், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வடவள்ளி பகுதியில் உள்ள அந்த ஆய்வகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த வடவள்ளி காவல்துறையினர் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தனியார் நுண்கிருமி பரிசோதனை நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

மேலும், அங்கு ஏற்கெனவே கரோனா இல்லாத சிலருக்கு கரோனா இருப்பதாக சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு காசநோய் தடுப்பு ஊசி மருந்து தயாரிப்பு

ABOUT THE AUTHOR

...view details