தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறையில் சாலையில் உணவுப் பொருள்களை வீசும் பயணிகள்- விலங்குகள் விபத்துக்குள்ளாகும் அபாயம்! - Valparai

பொள்ளாச்சி வால்பாறை சாலை பகுதியில் பயணிகள் பிஸ்கட் போன்ற உணவுப் பொருள்களை வீசி செல்வதால் அதை சாப்பிட வரும் வன விலங்குகள் விபத்துக்குள்ளாகி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறையில் சாலையில் உணவுப் பொருள்களை வீசும் பயணிகள்- விலங்குகள் விபத்துக்குள்ளாகும் அபாயம்
வால்பாறையில் சாலையில் உணவுப் பொருள்களை வீசும் பயணிகள்- விலங்குகள் விபத்துக்குள்ளாகும் அபாயம்

By

Published : May 14, 2022, 4:37 PM IST

Updated : May 14, 2022, 5:27 PM IST

கோயம்புத்தூர்,பொள்ளாச்சி வால்பாறை சாலையில் பிளாஸ்டிக் வீசி செல்வதால் அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகளை, பாதுகாக்க தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் குரங்குகள், வரையாடுகள் அதிக அளவில் சாலையோரம் உலா வருகின்றன.

தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு வாகனங்களில் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், தற்போது கவி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர். வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் உலாவரும் வரையாடுகள் மட்டும் குரங்குகளுக்கு பிஸ்கட் மற்றும் உணவுப்பொருள்கள் வீசி செல்வதால் வனவிலங்குகள் சாலையில் உணவுப்பொருள்களை தின்பதற்கு வருகின்றன.

வால்பாறையில் சாலையில் உணவுப் பொருள்களை வீசும் பயணிகள்- விலங்குகள் விபத்துக்குள்ளாகும் அபாயம்!

இதனால், வாகனங்கள் மோதி குரங்குகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. இதையடுத்து, வனத்துறையினர் வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தன்னார்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க:விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மான் - போராட்டத்திற்குப் பிறகு மீட்ட தீயணைப்பு துறையினர்

Last Updated : May 14, 2022, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details