பொள்ளாச்சி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் நவீன அறிவியல் ஆய்வக கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன் திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மழை நீரை சேமித்தால் மட்டுமே எதிர்காலத்தை காப்பாற்ற முடியும் - mayilsami annadurai
கோவை: மழை நீரை சேமித்தால் மட்டுமே எதிர்காலத்தில் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும் என மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
மழை நீரை சேமித்தால் மட்டுமே எதிர்காலத்தை காப்பாற்ற முடியும்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கிராமப்புற மாணவர்கள் நாசா விண்வெளி ஆய்வகத்தைப் பார்க்க விரும்புகின்றனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அறிவியல் ரீதியாக மழை நீரை சேமித்தால் மட்டுமே எதிர்காலத்தில் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும்” என தெரிவித்துள்ளார்.