கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த காஜா உசேன் பூ வியாபாரம் செய்துவருகிறார். இவர் அதீத மது அருந்தும் பழக்கம் உடையவர். இந்தப் பழக்கத்தினால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (அக். 15) மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த காஜா உசேனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆத்திரமடைந்த காஜா உசேன் வீட்டிலிருந்த பூரிக்கட்டையைக் கொண்டு அவரது மனைவியின் தலையில் அடித்துள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவரது மனைவி சத்தமிட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.