கோவை:75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி ஆகஸ்ட் 13,14,15 ஆகிய 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடலாம் என்று பிரதமர் மோடி இரு தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். அதனையடுத்து தேசியக்கொடி விற்பனை மற்றும் தயாரிப்பு கோவையில் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தேசியக்கொடிகளை தபால் நிலையங்களிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் குட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் உட்பட கோவையில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.