கோவை மாவட்டம் கணுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜூலியா எலிசபத் (60). இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக நடக்க முடியாமல் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக ஓய்வூதியம் வராத காரணத்தினால் மீண்டும் விண்ணப்பித்தபோது ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமென அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள இ-சேவை மையத்திற்கு ஜூலியாவின் மகள் சென்றபோது ஜூலியா தான் வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.