தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ம.நீ.ம வேட்பாளருக்கு பரிசுப் பெட்டி கொடுத்து அதிரவைத்த மூதாட்டி - gift box

கோவை: மக்கள் நீதி மய்யம் சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மூகாம்பிகைக்கு மூதாட்டி ஒருவர் பரிசுப் பெட்டியை கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.

ம.நீ.ம வேட்பாளர்

By

Published : Mar 30, 2019, 8:04 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் மூகாம்பிகை என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் பொள்ளாச்சி நகர்புற பகுதியில் உள்ள மரப்பேட்டை வீதியில் டார்ச் லைட் சின்னத்துடன்அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் வாக்கு சேகரிக்கும் போது மூதாட்டி ஒருவர் திடீரென அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னமான பரிசுப் பெட்டியை அவர் கையில் கொடுத்து, இதுபோல நீங்களும் டார்ச் லைட்டை பரிசாக தருவீர்களா என்று கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்தார்.

அதற்கு இது போன்ற பரிசுகளை நம்பி உங்கள் வாக்கை வீணாக்காதீர்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும அவர் பரிசு பெட்டி சின்னத்துடன் சமூக வலைதளங்களில் வரும் புகைப்படம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details