தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகளை குளிக்க வைப்பது எளிதானது அல்ல! - குளிப்பாட்டல்

கோவை: காணாமல் போன உறவுகளின் குறைகளைப் போக்குவதற்கும், குழந்தைகளை குளிக்க வைக்க தெரியாத தாய்மார்களுக்கும் உதவி வரும் வள்ளியம்மாள் பாட்டி. அவரை பற்றிய சிறப்பு தொகுப்பு..

பேபி

By

Published : Jul 30, 2019, 9:10 PM IST

கூட்டுக் குடும்பமாக இல்லாத இக்காலத்தில் தனியாக இருக்கும் கணவன், மனைவி அவர்களது குழந்தைகளை வளர்ப்பது என்பது சவாலான ஒன்று. அதிலும் பச்சிளம் குழந்தை என்றால் சொல்லவா வேண்டும். இருவரைத் தாண்டி மேலும் ஒருவர் குழந்தையை பார்த்துக்கொள்ள தேவைப்படுவர். அதிலும், குழந்தையை குளிக்க வைப்பது என்பது எளிதல்ல.

இந்த சூழலில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கோவை செல்வபுரம் பகுதியில் குழந்தையை குளிக்க வைக்க வள்ளியம்மாள் என்னும் மூதாட்டி வீட்டிற்கே வருகிறார். குழந்தையை குளிக்க வைப்பதற்கு மாதம் ரூ.1500 சம்பளமாக பெறும் மூதாட்டி வள்ளியம்மாள், கடந்த 40 வருடங்களாக குழந்தைகளை குளிக்க வைத்து வருகிறார்.

மேலும் இதுகுறித்து வள்ளியம்மாள் கூறுகையில், இரண்டு கால்களின் இடையில் குழந்தையைக் கிடத்தி கண், மூக்கு, காது, உள்ளிட்டவையில் சோப்பு, தண்ணீர் புகாதவாறு குழந்தையை குளிக்க வைக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் இந்த வேலை இருக்கும். எண்ணெய் தேய்த்து கை, கால்களை இதமாக இழுத்துவிட்டு குளிக்க வைத்தாள் குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கும் என்கிறார்.

குழந்தைகளை குளிக்க வைப்பது எளிதானது அல்ல!

குழந்தைகளை குளிக்க வைக்கும்போது தண்ணீர் பட்டாலே சில குழந்தைகள் பயங்கரமாக அழுகும். அவ்வாறு அழும் குழந்தையை பல்வேறு பேச்சுக்கள் மூலம் சமாதானம் செய்ய வேண்டியது இருக்கும். கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் அதிலுள்ள பெரியவர்களுக்கு குழந்தையை குளிக்கவைக்க தெரிவதில்லை. இதில் கணவன், மனைவி தனியாக இருந்தால், குழந்தையை குளிக்க வைக்க அதிக சிரமப்படுவதாகவும் தன்னை அழைத்தால் உடனடியாக சென்று குழந்தையை குளிக்க வைத்து விடுவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பெற்றோர்கள், கணவன் மனைவி இருவரும் மட்டுமே உள்ள நிலையில் குழந்தையை குளிக்க வைப்பது என்பது மிக சவாலான விஷயம் எனவும், இந்த பிரச்சனையை போக்க வள்ளியம்மாள் பாட்டியை அணுகுவதாகவும் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details