இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து போக்குவரத்து அனைத்தும் ரத்தானது. இதனால் பல்வேறு மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கோவை போத்தனூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் கட்டட தொழில் செய்துவருகின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டதால் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் வேலை செய்யும் இடத்திலேயே இருந்துவருகின்றனர்.
மேலும், அவர்கள் தங்களிடம் இருந்த சில உணவுப் பொருட்களை வைத்து இதுவரை சமைத்து வந்தனர்.