கோயம்புத்தூர்: விஷால் நடிப்பில் வெளியாக உள்ள "லத்தி" திரைப்படத்தின் டிரைலர் இந்துஸ்தான் கல்லூரியில் நேற்று (டிச.14) வெளியீடு செய்யப்பட்டது. டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பின் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், முதல்முறையாக கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்துள்ளேன். விவசாயிகள் பற்றி சரியான படம் யாரும் எடுத்ததில்லை. பிரச்சனையை சொல்வதை விட தீர்வு சொல்ல வேண்டும். உதயநிதி சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்துள்ளார் என கூறினார்.
பல வருடங்களுக்கு பின்பு தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என தெரிவித்து,
உதயநிதி அமைச்சராகியது மகிழ்ச்சி அளிக்கிறது. சின்ன படங்களை தான் ஓடிடியினர் வாங்குகிறார்கள். டிஜிட்டல் படங்கள் வரும் என கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். சிறிய முதலீட்டை வைத்து படம் எடுப்பதை தவிர்க்கலாம். சிறிய திரைப்படங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன என தெரிவித்தார்.