தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு ...என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இன்று (நவ-5)விசாரணை நடத்தினர்.

Etv Bharatகோவை கார் வெடிப்பில் தொடர்புடையவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள்  விசாரணை
Etv Bharatகோவை கார் வெடிப்பில் தொடர்புடையவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

By

Published : Nov 5, 2022, 2:34 PM IST

கோயம்புத்தூர் : கோவை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்பொழுது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் சிறையில் உள்ள 6 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேரடியாக கோவை மத்திய சிறைக்கு சென்று ஆறு பேரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணை 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜமிஷா முபீனின் உறவினர்கள் அசாரூதின், அப்சர்கான் ஆகியோரிடமும், வீட்டை காலி செய்ய உதவிய பெரோஸ், நிவாஸ், ரியாஸ் ஆகியோரிடமும், கார் கொடுத்த முகமது தல்ஹாவிடமும் தேசிய பாதுகாப்பு முகமை் அதிகாரிகள் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர்.

இதனிடையே சிறையில் உள்ள ஆறு பேரையும் சென்னை புழல் சிறைக்கு மாற்றவும் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் நாளை அல்லது திங்கட்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த முபின் வீட்டில் அதிர்ச்சியூட்டும் ஆவணங்கள் கைப்பற்றல்!

ABOUT THE AUTHOR

...view details