தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரைஞாண் கயிற்றுக்கு டேப் ஒட்டிய அதிகாரிகள் - NET தேர்வெழுதச் சென்றவருக்கு அதிர்ச்சி - latest news

UGC Net Exam Issue: நெட் தேர்விற்கு வந்த தேர்வர் அணிந்திருந்த, வெள்ளி அரைஞாண் கயிறை கழட்ட மறுத்ததால், அரைஞாண் கயிற்றின் மீது டேப் ஒட்டப்பட்டு தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெட் தேர்வரின் வெள்ளி அரைஞாண் கயிறு மீது டேப் ஒட்டப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்
நெட் தேர்வரின் வெள்ளி அரைஞாண் கயிறு மீது டேப் ஒட்டப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 1:08 PM IST

கோயம்புத்தூர்:கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்கும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் (JRF) தேசிய தகுதி தேர்வு (NET) நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை என ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. UGC சார்பில் நடத்தப்படும் இந்த நெட் தேர்வில் முதுகலை படித்து முடித்த மாணவர்களும், கல்லூரி விரிவுரையாளர்களும் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.

தேர்விற்கு வரும் மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்களிடம், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் கம்மல், செயின், மோதிரம், கொலுசு, தாலி, மெட்டி, தலைக்கு கிளிப் போன்றவை அணிந்து செல்லக்கூடாது எனவும், ஆண்கள் வெள்ளி அரைஞான் கயிறு உட்பட எந்த விதமான உலோகப் பொருட்களும் அணிந்து செல்லக்கூடாது அறிவுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

அதே போல் கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் நெட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தேர்விற்கு வந்த கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிறை கழட்டுமாறு கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் UGC விதிமுறைகளில் இல்லாத ஒன்றை செய்ய முடியாது என கூறி அவர் கழட்ட மறுத்துள்ளார்.

இதன் காரணமாக கல்லூரி விரிவுரையாளர் அணிந்து இருந்த வெள்ளி அரைஞாண் கயிறு மேல் டேப் ஒட்டி, அதன் பின்பே தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதித்துள்ளனர். இதேபோன்று தேர்வுக்கு வந்த மாணவியர் பலரும் அணிகலன்கள் அணியாமல், தலைவிரி கோலமாய் எழுதியதாக தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இது குறித்து நெட் தேர்வு எழுத மனைவியை அழைத்து வந்த ஜெயசீலன் கூறுகையில், “யுஜிசி விதிமுறைகளின் படி தேர்வு எழுத உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் சோதனை என்ற பெயரில் தேர்வு எழுத வருபவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர். இதனால் தேர்வர்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை. மேலும் கல்லூரியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் பெண் தேர்வர்கள் அவதிக்குள்ளாகும் நிலை உருவாகிறது. எனவே யுஜிசி, உடனடியாக கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க:வீணாகும் தேங்காய் தண்ணீரில் இருந்து சர்க்கரை நோயாளிக்கு மருந்து.. பொள்ளாச்சி இளைஞருக்கு ஜனாதிபதி விருது.. பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details