பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரத்தை ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் சூளேஸ்வரன்பட்டி, வஞ்சியாபுரம் பிரிவு உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "மத்தியில் ஆட்சிக்கு வந்த மோடி ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாக கூறினார். ஆனால் ஐந்து ஆண்டுகளில் ஐந்து கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆகும். இதுவரை இரட்டிப்பு ஆகவில்லை.
'மோடி ஆட்சியில் 5 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்' - 5 crore people
கோவை: ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று சொன்ன மோடி ஆட்சியில் 5 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக தமிழ்நாடு விவசாயிகளை கருவறுக்க வேண்டும் என்று விவசாய நிலங்களில் ஆழ்குழாய் பதிப்பு, மீத்தேன் திட்டம், விவசாயிகளின் அனுமதியின்றி உயர் மின்கோபுரம் அமைத்தல், கெயில், விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோல் குழாய் பதித்தல் ஆகிய திட்டங்களை விவசாய நிலங்களில்தான் அமைப்போம் என மத்திய அரசு அடம்பிடிக்கிறது. பல்வேறு மொழி கலாசாரம் கொண்ட கூட்டாட்சி முறை கொண்ட இந்தியாவை அந்தந்த மாநிலங்களில் பேசுக்கூடிய தாய்மொழிகள் குறித்து கவலை இல்லாமல், இந்தியா ஒரே நாடு ஒரே மொழி பேசும் நாடாக மாற்ற பாஜகவினர் முயற்சித்துவருகின்றனர்.
பிற மதத்தினரை இந்து மதத்தினராக மாற்ற முயற்சிப்பதால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர். இந்தியாவில் உள்ள பிற மொழிகளின் நலன் குறித்து கவலை இல்லாமல் இந்தியை திணிக்கும் பேராபத்து மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஏற்படும்" என்று தெரிவித்தார்.