தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேதமடைந்த குடிநீர் குழாய் - மலைவாழ் மக்கள் கோரிக்கை!

காட்டு யானைகளால் சேதமடைந்த குடிநீர் குழாயை சீர்செய்து தருமாறு மலைவாழ் மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓடையில் தண்ணீர் எடுக்கும் மலைவாழ் மக்கள்
ஓடையில் தண்ணீர் எடுக்கும் மலைவாழ் மக்கள்

By

Published : Oct 11, 2020, 2:04 AM IST

கோயம்புத்தூர்: நான்கு மாதம் கடந்தும் குடிநீர் குழாய்களை சீரமைக்காததால் பொள்ளாச்சி அடுத்துள்ள நவமலை மலைவாழ் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள நவமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பகுதியாகும்.

இங்கு 40-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

ஓடையில் தண்ணீர் எடுக்கும் மலைவாழ் மக்கள்

அதே நவமலையில் மின்உற்பத்தி நிலையம் உள்ளதால் அதன் ஊழியர்களின் குடும்பங்கள் 150-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குடிநீர் இணைப்பு குழாய்களை நான்கு மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது. அதனை தற்போதுவரை சரி செய்யாததால் குடிநீர் இல்லாமல் அருகிலுள்ள ஓடைகளுக்குச் சென்று குடிநீர் எடுத்து வந்து இம்மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை மின்சார துறை அலுவலர்களுக்கு தெரிவித்தும் குடிநீர் குழாய் சரி செய்ததால் மிகவும் சிரமப்படுவதாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குடிநீர் தட்டுப்பாடு : கொட்டாங்குச்சியில் தண்ணீர் சேமிக்கும் அவலம்

ABOUT THE AUTHOR

...view details