கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு அலகு உள்ளிட்ட இடங்களில் ஆலோசகர்கள், ஆய்வக செவிலியர், மருந்தாளுநர், கணினி மேலாளர், மாவட்ட திட்ட மேலாளர், மேற்பார்வையாளர், கணக்காளர், உதவியாளர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக ஊதிய மாற்றம் அறிவிக்காததைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கோயம்புத்தூரில் பணிபுரியும் 70 பேர் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய மாற்றம் வேண்டும்
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றத்தை அறிவித்து வந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக ஊதிய மாற்றத்தை நிறுவனம் அறிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.