கோவை: போத்தனூர் பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடத்தினர். கருப்பு உடை அணிந்தபடி இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். நபிகள் நாயகத்தின் பேரன் இமாம் உசேன் போரில் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மொகரம் பண்டிகையை துக்க நிகழ்வாக கடைபிடித்து வருகின்றனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் படி முதல் மாதமான மொகரம் மாதத்தின் முதல் தேதியில் இருந்து 10 ம் தேதி இமாம் உசேன் மறைவினை நினைவு கூர்ந்த ஷியா பிரிவு இஸ்லாமியர்கள், இன்று போத்தனூர் பகுதியில் பிற்பகலில் அரபு மொழியில் துக்க பாடல்கள் பாடி வழிபாட்டில் ஈடுபட்டனர். துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக வழிபாடு நடத்தும் இடத்தில் பஞ்சதத்தன் என்ற கொடி மரத்தில் கருப்பு கொடி ஏற்றி வைத்து துக்கத்தை வெளிப்படுத்தினர்.