கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ளது குரங்கு நீர்வீழ்ச்சி. இயற்கை சூழ்ந்த இவ்விடத்தை கண்டு மகிழ உள்ளுர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இந்நிலையில் கோடை காலத்தை அடுத்து வறட்சியின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை !
கோயம்பத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை !
இந்நிலையில் வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மூன்று மாதங்களுக்குப் பிறகு மழை பெய்து வருவதால், கடந்த வாரம் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது வால்பாறை, அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலான மழை பெய்து வருவதால் குரங்கு நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகக்கூறிய வனத்துறையினர், நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல மீண்டும் தடை விதித்தனர்.