தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'1.30 மணி நேரத்தில் 50 முட்டைகளில் 50 தலைவர்களின் உருவம்' - வரைந்து அசத்திய கோவை மாணவி - முட்டையில் தலைவர்கள் படம் வரைந்து சாதனை

கோவை: தொண்டாமுத்தூர் பகுதி உலியம்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி முட்டையில் தலைவர்கள் படம் வரைந்து சாதனைப் படைத்துள்ளார்.

monisha egg drawing
monisha egg drawing

By

Published : Feb 12, 2020, 11:58 PM IST

கோவை கல்லூரி ஒன்றில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார், மோனிஷா. சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர் ஓவியத்தில் புதுமை படைக்க, உண்ணும் முட்டையில் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார். பள்ளிப் பருவத்தின் போது முட்டையின் ஓட்டில், மகாத்மா காந்தியின் ஓவியம் வரைந்துள்ளார். அது அருமையாக வரவே அவரது தாய், தந்தை அளித்த ஊக்கத்தில் 1 மணி நேரம் 30 நிமிடங்களில் 50 முட்டைகளில் 50 இந்திய தலைவர்களின் முகங்களை வரைந்து தேசிய விருது பெற்றுள்ளார்.

இவரின் அடுத்த இலக்கு புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே. அதற்கான முயற்சியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறார். இதில் இவர் சிறு வயதில் இருந்தே எந்தவொரு ஓவியப் பயிற்சி மையம் செல்லாமலும், ஆசிரியர்கள் சொல்லித் தராமலும் தனது ஆர்வத்தின் மூலம் சொந்த முயற்சியில் தாமாக ஓவியம் கற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி தலைவர்களின் முகங்களைத் தவிர இயற்கைக் காட்சிகள், விழிப்புணர்வு ஓவியங்கள் போன்றவற்றை வரைய தன்னைத் தயார் படுத்திக் கொண்டுள்ளார். அதை வைத்து கின்னஸ் சாதனை படைக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
மேலும் இவர் ஓவியம் மட்டுமின்றி நடனம், மாரத்தான் போன்றவற்றிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

முட்டையில் தலைவர்கள் படம் வரைந்து சாதனைப் புரிந்த கோவை மாணவி
இது குறித்து மோனிஷா கூறுகையில், 'தற்போது பல மாணவர்கள், இளைஞர்களுக்கு தேசத் தலைவர்கள் பலரின் பெயர் தெரிவதில்லை. அதை அனைவரும் தெரிந்து கொள்ளவே இந்த புதுமையான முயற்சியை மேற்கொண்டேன். சாதாரணமாக காகிதங்களில் ஓவியம் வரைந்தால் அதை அனைவரும் பார்த்து விட்டுத் தான் செல்வர். ஆனால், இது போன்று வித்தியாசமாக முட்டைகளில் ஓவியம் வரைந்தால் அதை உற்று நோக்குவர். மேலும் அனைவரின் நியாபகத்திலும் இருக்கும்' என்று தெரிவித்தார். மேலும் அதில் இன்னும் இயற்கைக் காட்சிகள், விழிப்புணர்வு ஓவியங்கள் போன்றவற்றை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மாநில பட்ஜெட் - விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details