தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2021, 10:59 AM IST

ETV Bharat / state

கரோனா பரவல் தடுப்பு:  3 மாவட்டங்களுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்.

சென்னை: கரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு சிறப்பு ஐ.ஏ.எஸ்., அலுவலர்களை நியமித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

mk-stalin
மு.க ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கரோனா தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம், திருச்சி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் கரோனா தொற்றுப் பாதிப்பு அதிகமாக உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்திடவும், மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து, கரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளைக் கண்காணிக்கவும், இம்மூன்று மாவட்டங்களுக்கும் சிறப்பு ஐ.ஏ.எஸ் அலுவலர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திருப்பூருக்கு வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி, கோவைக்கு வணிக வரித்துறை செயலாளர் சித்திக், ஈரோட்டிற்கு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details