தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழக சிறைத்துறை தண்டனை இடமாக இல்லாமல் வாழ வைக்கும் இடமாக உள்ளது"- அமைச்சர் ரகுபதி! - tn news

காந்திபுரத்தில் சிறைக் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கை அமைச்சர்கள் ரகுபதி, முத்துச்சாமி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

“தமிழக சிறைத்துறை தண்டனை இடமாக இல்லாமல் வாழ வைக்கும் இடமாக உள்ளது”- அமைச்சர் ரகுபதி!
“தமிழக சிறைத்துறை தண்டனை இடமாக இல்லாமல் வாழ வைக்கும் இடமாக உள்ளது”- அமைச்சர் ரகுபதி!

By

Published : Aug 13, 2023, 9:21 PM IST

கோயம்புத்தூர் : தமிழக சிறை அங்காடிகளின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக மத்திய சிறை, கோவை புழல், வேலூர் பாளையங்கோட்டை, உள்ளிட்ட ஐந்து சிறை வளாகங்களில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் தமிழ்நாடு சிறை துறை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து நடத்த அரசால் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் "ஃப்ரீடம் பில்லிங் ஸ்டேஷன்" என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் அனைத்து "ஃப்ரீடம் பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களில்" மொத்த விற்பனை 847 கோடியே 31 லட்ச ரூபாய் அளவிலும், லாபம் 23 கோடியே 94 லட்ச ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் சிறை வாசிகளின் ஊதியம் 2 கோடியே 37 லட்ச ரூபாய் என்ற நிலையில், கோவையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் பிரீடம் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தில் கடந்த மாதம் வரையில் மொத்த விற்பனை 253 கோடியே 75 லட்ச ரூபாயும், மொத்த லாபம் 8 கோடியே 65 லட்ச ரூபாயும் மற்றும் சிறைவாசிகளின் ஊதியம் 69 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:என்.எல்.சி.விவகாரத்தில் பாமக உணர்வு ப்பூர்வமாக போராடியது - அன்புமணி ராமதாஸ்!

இந்நிலையில், கோவையில் 2வது சிறைத்துறையின் பிரீடம் பெட்ரோல் விற்பனை நிலையம் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் பாரதியார் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை தலைமை இயக்குநர் அமரேஷ் பூஜாரி, கோவை சரக சிறைத்துறை துணை தலைவர் சண்முகசுந்தரம், ஐ.ஓ.சி.எல். தலைவர் ஆகியோர் இருந்தனர். விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழக அரசின் நடவடிக்கையால் இந்தியாவில் தமிழகம் சிறைத்துறையில் 1வது இடத்திற்கு வந்துள்ளதாகவும், உணவகத்தில் கிடைக்காத அளவிற்கு உணவு சிறைத்துறையில் வழங்கப்படுவதாகவும் கூறினார்.

கடந்த 45 ஆண்டுகளுக்கு பிறகு உணவு பட்டியல் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 12) புழல் மத்திய சிறையில் உள்ள பெண் சிறைவாசிகள் பணிபுரிய சென்னை அம்பத்தூர் சாலையில் 1 கோடியே 92 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பெட்ரோல் பங்க் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

இதையும் படிங்க:சரத் பவார் - அஜித் பவார் திடீர் சந்திப்பு... மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் புயல் வீசுமா?

ABOUT THE AUTHOR

...view details