தமிழ்நாடு முழுவதும் ஏழு இடங்களில் புதிதாக அரசுக் கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதியளித்ததைத் தொடர்ந்து இந்தாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கோயம்புத்தூர் புலியகுளம் பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாநகராட்சி பெண்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (அக்.09) மாநகராட்சி பள்ளி வளாகத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையானது தொடங்கியது.
மாணவர்கள் சேர்க்கையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “கோவை மாவட்டத்தில் பல்வேறு சாதனைகளை அரசு செய்திருக்கிறது. விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், புதிய பாலங்கள், ஐந்து அரசுக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்த அரசு கொண்டு வந்துள்ளது.