கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை ஆட்சியர் ராசாமணி உள்ளிட்ட பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது கோவையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது கரோனா பாதிப்புள்ள இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, கோவை மாவட்டத்திற்கு புதிதாக வாங்கப்பட்ட 12 ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.