தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோலையார் அணையை ஆய்வு செய்த அமைச்சர் - solaiyar dam

வால்பாறை அடுத்த சோலையார் அணையில் செய்திதுறை அமைச்சர் ம.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

சோலையார் அணையை ஆய்வு செய்த அமைச்சர்
சோலையார் அணையை ஆய்வு செய்த அமைச்சர்

By

Published : Jul 12, 2021, 10:32 AM IST

கோயம்புத்தூர்: சோலையார் அணையில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று (ஜூலை 11) ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களைச் சந்தித்த அமைச்சர், இலவச வீட்டுமனை பட்டா வழங்கல், நலத்திட்ட உதவிகளுக்கான மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அணையின் நீர் இருப்பு, தண்ணீர் திறப்பு, மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற்றம் பற்றி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட வருவாய்த்துறை உயர் அலுவலர்கள், வட்டாட்சியர் ராஜா, பொதுப்பணித்துறை அலுவலர்கள், திமுக நகர செயலாளர் பால்பாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்கால்!

ABOUT THE AUTHOR

...view details