தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பில்லூர் 3-வது கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என்.நேரு உறுதி - today news

Minister K.N.Nehru: கோயம்புத்தூர் வ.உ.சி மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முடிவற்ற பணிகளை, அமைச்சர் கே.என் நேரு மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே என் நேரு
நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே என் நேரு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 3:23 PM IST

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே என் நேருநலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே என் நேரு

கோயம்புத்தூர்: வ.உ.சி மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முடிவற்ற பணிகளை, அத்துறையின் அமைச்சர் கே.என் நேரு மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் 11.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 27 முடிவற்ற பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. மேலும் 67.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 558 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 32.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 703 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம்: இதையடுத்து மேடையில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, ஈரோட்டில் இரண்டாவது பேருந்து நிலையம் அமைக்க அமைச்சர் முத்துசாமி நிதியுதவி செய்துள்ளதாக தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டியில் கோவை மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது எனவும் குடிநீர் வழங்கலில் தமிழ்நாடு முதலிடம்‌ பெற்றுள்ளது எனவும் கூறினார்.

சிறுவாணி அணையில் இருந்து முறையாக தண்ணீர் பெறுவதற்கு, கேரள அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் வருகின்ற அக்டோபர் மாதத்தில் முடிவடைந்து, அக்டோபரில் மாதத்தில் இருந்து கோவைக்கு தினமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி தான் குடிநீருக்கு ஒதுக்கப்பட்டது என குறிப்பிட்ட அவர், தற்போது திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தமிழகத்தில் 60 சதவீத மக்கள் நகரத்தில் தான் இருக்கின்றனர் என்று கூறிய அவர், நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்கிறோம், அதற்கான நன்றியை நீங்கள் காட்ட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என் நேரு, “கோவை மாநகருக்கு நாள் ஒன்றுக்கு 298 எம்.எல்.டி குடிநீர் தேவை. ஆனால் 214 எம்.எல்.டி தண்ணீர் தான் கிடைக்கிறது. தற்போது பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறப்போகிறது.

கோவை மாநகருக்கு தினமும் தண்ணீர்:அத்திட்டத்தில் இன்னும் ஒன்றரை கி.மீ தான் பாக்கி உள்ளதால் அப்பணிகள் சிக்கீரம் முடிந்து விடும். கூடுதலாக 188 எம்.எல்.டி தண்ணீர் வந்ததும் கோவை மாநகருக்கு தினமும் தண்ணீர் வழங்கப்படும். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தினமும் தண்ணீர் வழங்கப்படும். சிறுவாணி, ஆழியார் அணைகள் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கேரள அரசுக்கு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்” என்றுக் கூறினார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்காத காரியம்:தொடர்ந்து பேசிய அவர், “கோவை மாநகரில் 280 கி.மீக்கு சாலைகளை சீரமைக்க பணம் ஒதுக்கி உள்ளோம். உத்திர பிரதேச சாமியார் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார். தலையை சீவ 10 கோடி ரூபாய் தேவையில்லை, 10 ரூபாய் சீப்பு போதும் என உதயநிதியே பதில் சொல்லி விட்டார். நாங்கள் திராவிட இயக்க கொள்கையை 100 வருடங்களாக பேசி வருகிறோம். இவர்கள் புதிதாக ஆரம்பித்துள்ளார்கள்.

பாரத் என வந்தாலும், இந்தியா என இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம். ஆனால் நாங்கள் எப்போதும் போல ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம் என நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு சொல்லியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்காத காரியம். அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"ஆட்சிக் கவிழ்ப்பு என்பதலாம் மிரட்டல்... அது நீண்டகாலமாக நடக்கிறது" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

ABOUT THE AUTHOR

...view details