கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புறத்திலுள்ள ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமின்றி, வேலைக்குச் செல்ல முடியாமல், வீட்டிலேயே முடங்கி இருப்பதால் சிரமம் அடைகின்றனர்.
இம்மக்களுக்கு உதவும் வகையில், பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர், குருநல்லிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
அப்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், 144 தடை உத்தரவு காலங்களில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், சமூக இடைவெளியை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.