தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொடி நடையாக கோவைக்குள் நுழையும் தொழிலாளர்களால் கரோனா பரவுகிறதா? - கோவை மாவட்ட செய்திகள்

கோவை: அணைப் பகுதி வழியாக ஆபத்தான முறையில் கேரளாவிலிருந்து கோவைக்குள் நுழையும் பயணிகளால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வரும் பயணிகள்
கேரளாவில் இருந்து வரும் பயணிகள்

By

Published : Jun 16, 2020, 9:33 PM IST

கரோனா பரவல் காரணமாக அண்டை மாநிலமான கேரளா எல்லைக்குள் நுழைய அம்மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உரிய அனுமதி பெற்ற பின்புதான் மாநில எல்லையை கடந்துச் செல்ல முடியும். இதைப் போலவே கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் நுழைய கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய தேவைக்கும், மருத்துவ காரணங்களுக்காக தமிழ்நாடுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடையாக எல்லையைக் கடக்கும் கால்கள்

கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய வாளையாறு, ஆனைகட்டி உள்ளிட்ட 14 வழித்தடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே எல்லையைக் கடக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவைக்கு பல்வேறு வழிகளில் பொதுமக்கள் இடம்பெயருவது வாடிக்கையாக நடந்துவருகிறது. வனப்பகுதி, ரயில் பாதை, அணை என பல வழித்தடங்களை இந்த பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தற்போது தமிழ்நாடு- கேரள எல்லையான வாளையாறு பகுதியில் உள்ள அணை பகுதி வழியாக ஆபத்தான முறையில் ஏராளமான பயணிகள் கோவைக்கு வந்த வண்ணம் உள்ளனர். வாளையாறில் இருந்து அணைப்பகுதிக்கு ஆட்டோ மூலம் சென்று அங்கிருந்து நடந்து தமிழ்நாட்டு எல்லைக்குள் தடம் பதிக்கின்றனர்.

அணையில் தற்போது குறைந்த அளவு நீர் உள்ளதால் பயணிகளுக்கு அது வசதியாகவுள்ளது. இதன் காரணமாக கோவையில் கரோனா தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதை கண்காணித்து அணைப் பகுதி வழியாக வரக்கூடியவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் இல்லாவிட்டால் அவர்களை சோதனைக்கு உட்படுத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பாதுகாப்பான முறையில் பயணிக்க பொருளாதார வசதியில்லாத இம்மக்களை பட்டியலிட்டு அரசு பாதுகாப்பாக அழைத்துவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க: முழு ஊரடங்கு: 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது!

ABOUT THE AUTHOR

...view details