கோவை:கேரள எல்லையான க.க.சாவடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தினர் அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை சோதனை செய்ததில் மெத்தாம்பேட்டமைன் என்ற உயர் ரக போதை மாத்திரைகள் விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் இருவரும் கேரளம் மாநிலம் பாலக்காடு ஆழிக்கல் ஹவுஸ் பகுதியை சேர்ந்த அப்துல் ராஷீக், அவரது நண்பர் ஜெசிர் என்பதும் தெரியவந்தது.