கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே மலைவாழ் கிராமத்தில், கடந்த 1ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தகவல் வெளியானது.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் ஏற்கனவே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.