தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்ஸோவில் கைது! - பாலியல் வன்புணர்வு வழக்கு

கோவை: பொள்ளாச்சியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை மகளிர் காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ், கைது செய்துள்ளனர்.

Man arrested for sexually abusing girlMan arrested for sexually abusing girl
Man arrested for sexually abusing girl

By

Published : May 26, 2020, 1:45 AM IST

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியைப் பிரிந்து பொள்ளாச்சியில் தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். வேலை செய்யும் இடத்தில் முத்துக்குமாருக்கு கணவனை இழந்த பெண்ணுடன் திருமணத்தைத் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து முத்துக்குமார், அவருக்குத் தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு 14 வயதில் மகள் இருந்திருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் பழக்கமான பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் முத்துக்குமார், யாரும் இல்லாத நேரத்தில் அவ்வீட்டில் இருக்கும் சிறுமியையும் பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, முத்துக்குமார் நேற்று முன் தினமும் வழக்கம்போல் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின் அச்சிறுமி இதுகுறித்து தனது தாயாரிடம் தெரிவித்ததையடுத்து, சிறுமியின் தாயார், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்துக்குமார் மீது புகார் கொடுத்துள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், முத்துக்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் நீதிபதியின் உத்தரவின் பேரில், அந்நபர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:இளைஞர் வெட்டிக் கொலை - அடையாளம் தெரியாத கும்பலுக்கு போலீஸ் வலை

ABOUT THE AUTHOR

...view details