தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்திற்கு மறுத்த காதலியின் ஆபாசப் புகைப்படத்தைப் பகிர்ந்தவர் கைது! - man arrested for leaking private photos of a girl who neglected to marry him

கோயம்புத்தூர்: திருமணத்திற்கு மறுத்த காதலியின் ஆபாசப் புகைப்படத்தை அப்பெண்ணின் தந்தைக்கு அனுப்பியவர் கைதுசெய்யப்பட்டார்.

தேவேஸ்வர்
தேவேஸ்வர்

By

Published : Nov 3, 2020, 2:46 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பெங்களூருவில் தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவேஸ்வர் என்ற இளைஞரைக் காதலித்துள்ளார். அவரும் அந்தப் பெண்ணைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கல்லூரி விடுமுறையின்போது இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். இருவரும் காதலிப்பது பெண்ணின் வீட்டாருக்குத் தெரியவரவே பெண்ணின் தந்தை இருவரையும் கண்டித்துள்ளார். தேவேஸ்வர் தனது காதலியைத் தனக்கு திருமணம் செய்துவைக்கும்படி அப்பெண்ணின் தந்தையிடம் கேட்டுள்ளார்.

ஆனால் பெண்ணின் தந்தை இதற்கு மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரியில் படிக்கும்போது காதலிக்குத் தெரியாமல் எடுத்த ஆபாச புகைப்படத்தை காதலியின் தந்தையின் செல்போனுக்கு அனுப்பி திருமணம் செய்துவைக்கும்படி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, பெண்ணின் தந்தை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குனியமுத்தூர் காவல் துறையினர் தூத்துக்குடியில் இருக்கும் தேவேஷ்வரிடம் விசாரணை மேற்கொண்டு பெண்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் - காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா

ABOUT THE AUTHOR

...view details