கோயம்புத்தூர்:பொள்ளாச்சி பல்லடம் ரோடு, நந்தனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வரும் இவருக்கு, கணேசன் என்ற நண்பர் இருந்துள்ளார். கணேசன் கோவை அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கணேசன் மணிகண்டனிடம் மது கேட்டுள்ளார். ஆனால், மணிகண்டன் மது தர மறுத்துள்ளார். இதனால் கணேசன் கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக, மகாலிங்கபுரம் காவல் நிலைய காவல் துறையினர், நந்தனார் காலனி பகுதியில் உள்ள மணிகண்டன் கடையை அகற்றக் கோரி பொள்ளாச்சி நகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளும், மணிகண்டன் கடையை அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.