தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகராஷ்டிராவில் கைப்பாவையான ஆளுநர் - புதுவை முதலமைச்சர் நாராயணசாமி! - kovai news

கோவை: மகராஷ்டிரா ஆளுநர் பாஜக அரசிற்கு கைப்பாவையாகச் செயல்பட்டு வருகிறார் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.

v

By

Published : Nov 24, 2019, 5:31 PM IST

புதுச்சேரி அரசின் செயலர் அன்பரசின் தாயார் கடந்த வாரம் மரணமடைந்தார். கோவை டி.வி.எஸ் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ‘மகாராஷ்டிராவில் ஜனநாயக படுகொலை நடத்துள்ளது. ஆளுநரை கைப்பாவையாக வைத்துக்கொண்டு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பாஜகவினர் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, மாற்று கட்சி ஆட்சியில் இருக்கின்ற மாநிலத்தில் ஆட்சி கலைப்பு செய்வது, குதிரை பேரம் பேசுவது உள்ளிட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு ஆட்சியை பிடிக்கின்றனர். பாஜக எதிர்கட்சிகளை அழிக்கும் செயலில் ஈடுபடுகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல’ என்று தெரிவித்தார்.

கோவையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், மகாராஷ்டிராவில் சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் அதிமுக அரசு பிரதமரை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டும் எனவும் கூறினார்.

For All Latest Updates

TAGGED:

kovai news

ABOUT THE AUTHOR

...view details