தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மார்டின் நிறுவன காசாளர் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்... - கோவை

கோவை: தொழிலதிபர் மார்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் கொலைக்கான முகாந்திரம் இருப்பதாக, வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாளர் பழனிசாமி கொலையானதற்கான

By

Published : Jul 31, 2019, 2:10 AM IST

தொழிலதிபர் லாட்டரி மார்டின் நிறுவனத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், அந்நிறுவன காசாளர் பழனிசாமி காரமடை அருகேயுள்ள குட்டையில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். பழனிசாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், கடந்த மே 5ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. இவ்வழக்கில் கோவை எட்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாசை விசாரணை அலுவலராக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. இதையடுத்து பழனிசாமியின் உடற்கூறாய்வு திருப்திகரமாக இல்லை என்பதால், மறு பரிசோதனை நடத்த நீதிபதி ராமதாஸ் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த மே 28ஆம் தேதி பழனிசாமி மகன் ரோஹின்குமார் தரப்பு மருத்துவர் சம்பத்குமார் உட்பட 3 மருத்துவர்களால், மறு உடற்கூறாய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் மருத்துவர் சம்பத்குமார் கோவை எட்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாசிடம் உடற்கூறாய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கொலைக்கான முகாந்திரம் இருப்பதாகவும், பழனிசாமி தற்கொலை செய்யவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பழனிசாமி மகன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் அரசு தரப்பு மருத்துவர்கள் இன்னும் அறிக்கை சமர்பிக்கவில்லை எனவும், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details