தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டுப்பாளையம் அருகே முள் வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு! - Coimbatore District News

கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் அருகே முள் கம்பியில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட சிறுத்தை
மீட்கப்பட்ட சிறுத்தை

By

Published : Jun 14, 2020, 10:23 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் தனியார் நூற்பாலைக்குச் சொந்தமான முள் கம்பி வேலியில் 5 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று சிக்கியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் கம்பி வேலியில் சிக்கியிருந்த சிறுத்தையை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி சேதாரம் இல்லாமல் மீட்டனர். அதன்பின் அந்த சிறுத்தையை சத்தியமங்கலம் வன பகுதிக்குள் அனுப்ப முடிவு செய்தனர்.

மீட்கப்பட்ட சிறுத்தை

முள் கம்பிக்குள் சிக்கிய சிறுத்தையை பார்க்க அப்பகுதி மக்கள் பலரும் கூடுயதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:3 மணி நேர போராட்டம் - பட்டாசு சத்தத்தை பொருட்படுத்தாத யானைக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details