தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவு வாங்கப்பட்ட மாடு: சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் கிலி! - valparai leopard attack

கோயம்புத்தூர்: வால்பாறையில் சிறுத்தை தாக்கி மாடு உயிரிழந்ததையடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

valparai leopard attack
valpari leopard attack cow death

By

Published : Apr 19, 2020, 12:41 PM IST

Updated : May 19, 2020, 5:30 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையை அடுத்த மாணிக்கா எஸ்டேட் பகுதியில் வசித்துவருபவர் வாசுகி. இவர் 2 வயது மதிக்கத்தக்க மாட்டை காலையில் மேய்ச்சலுக்கு அனுப்பியுள்ளார், மாலை மாடு வீட்டிற்கு வராததால் மேய்ச்சலுக்குச் சென்ற மாட்டை தேடி பார்த்தபோது பிரதான சாலையில் சிறுத்தை தாக்கிய நிலையில் மாடு உயிரிழந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜன் அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வால்பாறை கால்நடை மருத்துவர் மெய்யரசன் தலைமையில் இறந்த மாட்டை உடற்கூறு ஆய்வுசெய்து சிறுத்தை அடித்து கொன்றது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் அப்பகுதியில் சிறுத்தை அடிக்கடி நடமாடுவதைக் கண்ட பொதுமக்கள் அதனைக் கூண்டுவைத்து பிடிக்குமாறு கோரிக்கைவைத்துள்ளார்கள். இதனால் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவிவருகிறது.

இதையும் படிங்க:நடமாடும் உரக்கடையை தொடக்கி வைத்த வேளாண் துறை

Last Updated : May 19, 2020, 5:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details