கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "சமீபத்தில் கோயில்கள் அனைத்தையும் பக்தர்கள் வசம் ஒப்படைத்து பராமரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.
போதுமான அளவில் கோயில்களை அரசு சரியாகப் பராமரிப்பதில்லை. ஆனால், பெரிய கோயில்களிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு அரசு செயல்பட்டுவருகிறது.