கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பகுதியில் ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவியாகப் பணியாற்றி வருபவர், சரிதா. பட்டியலினத்தைச் சேர்ந்த சரிதாவிற்கு அதே பகுதியில் வசிக்கும் உசிலை மணி (எ) பாலசுப்ரமணியம் என்பவர், சாதிய ரீதியாக மிரட்டல் விடுப்பது, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள தலைவர் இருக்கையில் அமரக்கூடாது என ஆதிக்கத் தொனியில் பேசுவது, பெயர்ப் பலகையில் பெயரை மாற்றக்கூடாது என்பது போன்ற தொந்தரவுகளைக் கொடுப்பதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தார்.
இதையும் படிங்க:’ஊராட்சி மன்றத் தலைவர் உயிருக்கே பாதுகாப்பு இல்லையா?' - ஸ்டாலின் கண்டனம்
இது தொடர்பாக, துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் விசாரணை நடத்திவருகிறார். இந்தப் புகாரின் பேரில் பாலசுப்ரமணியம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் வழக்குப் பதிவு செய்தார்.