தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் ஆலங்கட்டி மழை! - தமிழ் நாடு வானிலை

கோவை: வெப்பச் சலனம் காரணமாக கோவை புறநகர்ப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் ஆலங்கட்டி மழை

By

Published : May 11, 2019, 6:36 PM IST

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோவையில் கடந்த சில தினங்களாகவே 100 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் நிலவி வந்தது.

வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம் பகுதிகளில் இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

பலத்த மழையின் போது ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

கோவையில் ஆலங்கட்டி மழை

ABOUT THE AUTHOR

...view details