தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உண்டியலை திருட முயன்ற இளைஞர் காவல் துறையி ஒப்படைப்பு - கோவை க்ரைம் செய்தி

கோவை: போத்தனூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை அப்பகுதியினர் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

kovai person tried looting temple hundial caught by public and handovered to police
போத்தனூர் கோயில் உண்டியல் திருட்டு

By

Published : Feb 26, 2020, 1:28 PM IST

கோவை மாவட்டம் போத்தனூரை அடுத்த அண்ணாபுரம் ஊரில் உள்ள அக்னி மாரியம்மன் கோயிலில் இன்று அதிகாலை 4 மணியளவில் கோயிலின் உள்ளே இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

அப்போது அப்பகுதி மக்கள் சிலர் அங்கு சென்று பார்த்தபோது இளைஞர் ஒருவர் கோயிலின் உள்ளேயிருந்து வெளியே வந்துள்ளார். அவரை பிடித்து பொதுமக்கள் விசாரித்தபோது, கோயில் உண்டியலை திருட வந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

பின் அவரை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்தனர். தொடர்து போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரை அழைத்து சென்றனர்.

அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கோவையைச் சேர்ந்த ஆசாத் எனத் தெரியவந்தது. மேலும் திருட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், அது யாருடைய வாகனம் என்றும் எதற்காக அவர் திருட முயன்றார் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

உண்டியலை திருட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைப்பு!

இதையும் படிங்க:காஞ்சிபுரத்தில் தொடரும் மணல் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details