தமாகா கட்சியின் மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனார் பிறந்தநாள், அக்கட்சியின் கோவை புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் கொண்டப்பட்டது.
அதனையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு ஆரோ குடிநீர், இரண்டு பீரோகள், இரண்டாயிரம் கையுரை, முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து சிறுகளத்தை பகுதியில் மரகன்றுகள் நடப்பட்டன. மேலும் பொள்ளாச்சியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.