தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் ஆசிரியர்கள் பறை இசையமைத்து கின்னஸ் சாதனை

கோவை: தனியார் கல்லூரியில் ஆசிரியர்கள் உட்பட ஆயிரம் பறை இசைக் கலைஞர்கள் இசையமைத்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர்.

kovai including teachers 1000 parai musician made guinness
கோவையில் ஆசிரியர்கள் பறை இசையமைத்து கின்னஸ் சாதனை

By

Published : Dec 29, 2019, 1:06 PM IST

கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற பறைகள் ஆயிரம் என்ற நிகழ்ச்சியில், ஆயிரம் பறை இசைக் கலைஞர்கள் ஒரு மணி நேரம் இடைவிடாது இசை அமைத்து உலக கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர்.

இந்த முயற்சிக்காக தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பறை இசைக் கலைஞர்கள், சிறுவர்கள், பள்ளி ஆசிரியர்கள் பறை இசையமைத்தனர். கடந்த நான்கு மாதங்களாகவே இதற்கென பயிற்சிகள் மேற்கொண்டு, நேற்று ஆயிரம் இசைக்கலைஞர்களும் ஒரே நேரத்தில் இசை அமைத்து உலகச் சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.

பறை இசைக் கலைஞர்கள் சாதனை

இதுகுறித்து பேட்டியளித்த காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை யுவராணி, நலிந்து வரக்கூடிய, நமது பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்றும் மாணவர்களிடையே நம்முடைய பாரம்பரிய கலையை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார்.

இதன் மூலம் மக்களிடையே பறை இசை குறித்து பல விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

கோவையில் ஆசிரியர்கள் உட்பட ஆயிரம் பறை இசைக் கலைஞர்கள் இசையமைத்து கின்னஸ் சாதனை

இதையும் படியுங்க:

திருமண விழாவில் பறை ஒலித்த பேரறிவாளன்!

ABOUT THE AUTHOR

...view details