சென்னை: கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தில் காலை 10 மணியிலிருந்து தனிப்படை காவலர்கள் கோடநாடு வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
உதகை இருந்து நேற்று மாலை கோவை வந்த தனிப்படை காவலர்கள் கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட உயிரிழந்த கனகராஜ் மனைவி கலைவாணி மற்றும் உறவினர்களிடம் இன்று (செப்.4) காலையிலிருந்து தனிப்படை காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கார் ஓட்டியவர் கனகராஜ். இவர், கடந்த 2018ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து விசாரணையை அவருடைய மனைவி மற்றும் உறவினர்களிடம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோடநாடு வழக்கு விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் முதலில் இருந்து அனைத்து தரப்பு சாட்சிகளிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் ஆரம்ப கட்டத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வழக்கு குறித்து எந்த தகவலும் வெளியிட முடியாது எனக் காவல்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : கோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை