தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலிக்க மறுத்த பெண் கொலை வழக்கில் கொலையாளி கைது! - Coimbatore District News

கோவை: காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய நபரை காவல்துரையினர் கைது செய்தனர்.

ரித்திஷ்
ரித்திஷ்

By

Published : Jul 20, 2020, 4:17 PM IST

கரூர் செட்டிப்பாளையம் பகுதி ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்த ரித்திஷ்(22) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா கடந்த 6 மாதங்களாக ரித்திஷ்சுடன் பேசாமல் இருந்து வந்ததுள்ளார். இது குறித்து ரித்திஷ் கேட்கும் போதெல்லாம் ஐஸ்வர்யா காதலிக்க விருப்பம் இல்லை என்றே கூறி வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ரித்திஷ் கடந்த வெள்ளிக்கிழமையன்று (17.07.20) ஐஸ்வர்யாவை பார்க்க அவர் வீட்டின் அருகில் சென்றுள்ளார். அப்போது இருவரும் பேசுகையில், ஐஸ்வர்யா காதலிக்க விருப்பம் இல்லை என்று கூறியதால் ரித்திஷ் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஐஸ்வர்யாவை வயிற்றிலும் கையிலும் மாறி மாறி குத்தியுள்ளார்.

அப்போது ஐஸ்வர்யாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரின் அப்பாவையும் ரித்திஷ் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (18.07.20) ஐஸ்வர்யா உயிரிழந்தார். இது குறித்து தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரித்திஷை தேடி வந்தனர்.

இந்நிலையில் தப்பி ஓடிய ரித்திஷை தொண்டாமுத்தூர் காவலர்கள் இன்று (20.07.20) கேரளாவில் பிடித்தனர். பின்னர அவரை அங்கிருந்து அழைத்து வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ஒருதலைக் காதல்: 17 வயது சிறுமியை குத்திவிட்டு இளைஞர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details