கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
30 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை: ஆட்சியரிடம் மனு - coimbatore collector rasamani
கோவை: 30 ஆண்டுகளாக மின்சாரம் வசதி இல்லை என கவுண்டன்புதூர் பகுதி மக்கள், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை
அந்த மனுவில், "நாங்கள் வசிக்கும் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். கடந்த 30 வருடங்களாக மின்சார வசதி இல்லாமல் தவித்துவருகிறோம். செல்போனை சார்ஜ் செய்யகூட ஒரு கிமீ செல்ல வேண்டியுள்ளது.
மின்சார வசதி இல்லாததால் குழந்தைகள் படிக்கவும் சிரமப்படுகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பகுதியில் வசித்துவரும் தங்களுக்கு உடனடியாக அரசு பட்டா வழங்கி மின்சார இணைப்பைத் தர வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.