தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அதிமுகவினர் தேர்தல் நடத்தை மீறல்’ - வீடியோ பகிர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி - கார்த்திகேய சிவசேனாபதி

கோயம்புத்தூர்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆட்கள் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி அராஜகத்தில் ஈடுபட்டதாகக் கூறி தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

கார்த்திகேய சிவசேனாபதி
கார்த்திகேய சிவசேனாபதி

By

Published : Apr 6, 2021, 10:03 AM IST

Updated : Apr 6, 2021, 10:56 AM IST

கோவை மாவட்டம், ஆலந்துறை பகுதியில் நள்ளிரவு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆட்கள் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி அராஜகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலரும் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளருமான கார்த்திகேய சேனாபதி தனது பேஸ்புக் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், தங்களது இடங்களில் சோதனையிட வந்த துணை காவல் கண்காணிப்பாளரை அனுமதிக்காமல் அதிமுகவினர் தடுத்ததாகவும் தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எஸ்.பி.வேலுமணி சார்பில் பொதுமக்களுக்கு ’கூகுள் பே’ மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இன்று காலை முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், கார்த்திகேய சேனாபதி இந்தக் காணொலியை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'எஸ்.பி. வேலுமணியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்'

Last Updated : Apr 6, 2021, 10:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details