தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம் ! - திடியன் கைலாசநாதர் - பெரியநாயகியம்மன் கோயில்

தமிழ்நாடு முழுவதும் இன்று(நவ.29) கார்த்திகை திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடில் உள்ள பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டும், சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

கார்த்திகை தீபத் திருவிழா
கார்த்திகை தீபத் திருவிழா

By

Published : Nov 30, 2020, 4:13 AM IST

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று கார்த்திகைத் திருநாள். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும், சிவபெருமான் ஜோதி வடிவமாக காட்சி தந்ததையே கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நாளில் மக்கள் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவர். கோயில்களில் சிறப்பு தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படும். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் இன்று(நவ.29) கார்த்திகை தீப வழிபாடு நடைபெற்றது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி பகுதியிலுள்ள கோபால்சாமி மலையில் ஆயிரம் வருடங்கள் பழைமையான கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருநாளில், 1300 அடி மலையின் மீது உள்ள, 20 அடி கொப்பரையில் தீபமேற்றுவது ஐதீகமாகும். இந்த தீபம் மூன்று நாட்கள் தொடர்ந்து தீபம் ஏரியும். இன்று இந்த தீபம் ஏற்றப்பட்டது.

மயிலாடுதுறை

இறைவன் ஜோதி வடிவாக நின்று அருள்பாலிப்பவன் என்பதை உணர்த்துவதற்காகவே சொக்கப்பனை கொளுத்தும் உற்வசம் கோயில்களில் நடத்தப்படுகிறது. மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோயில் சொக்கபனை கொளுத்தும் உற்சவம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி, மாயூரநாதர் சந்நிதியில், அஸ்திரதேவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோயிலின் முன்புறம் சொக்கப்பனை கொளுத்தும் உற்சவம் நடைபெற்றது.

மதுரை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது 1500 ஆண்டுகள் பழமையான திடியன் கைலாசநாதர் - பெரியநாயகியம்மன் கோயில். தென்திருவண்ணாமலை என அழைக்கப்படும் இந்த கோயிலின், 800 அடி உயரமுள்ள மலையின் உச்சியிலுள்ள தங்கராமன் கோயில் அருகேயுள்ள பீடத்தில் கார்த்திகை திருநாளான இன்று மகா தீபம் ஏற்றப்பட்டது.

சொக்கப்பனை கொழுத்தும் காட்சி

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் தென் மாவட்டங்களில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் காா்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக 2 தினங்கள் நடைபெறுகிறது. நேற்று மாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலையில் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த மகா ருத்ர தீபமான சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் சிவன் கோயிலின் படித்துறையில் கார்த்திகை தீபத்திருநாளன்று மக்கள் கார்த்திகை தீபம் வைத்து வழிபடுவர். அது போலவே இம்முறையும் மக்கள் வழிப்பட்டனர். அவர்களுடன் இணைந்து கோவை மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்களும், இயற்கை வளம் செழிக்க வேண்டும், ஆறுகள் வற்றாமல் ஓடிவேண்டும், வனங்களும் வனவிலங்குகளும் செழிப்போடு இருக்க வேண்டும் என்று பேரூர் பட்டீஸ்வரர் கோயில் படித்துறையில் விளக்கேற்றி வழிப்பட்டனர்.

படித்துறையில் விளக்கேற்றி வழிபாடு

இதையும் படிங்க:வரலாற்றில் முதல் முறையாக பக்தர்கள் இல்லாமல் ஏற்றப்பட்ட மகா தீபம்!

ABOUT THE AUTHOR

...view details