கோயம்புத்தூர்: கோவை சிட்டிசன் பார்ம் அமைப்பு சார்பில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை தொழில் அமைப்பினர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். பின்னர், "இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் மூலம் மாவட்டம் மற்றும் மாநில பொருளாத்தராத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் வானதி போன்ற தலைவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதால், சாதனைகளை நிறைவேற்றுவதால் தேர்தல் வெற்றி வந்துவிடாது. எஸ்.பி.வேலுமணி அண்ணனை போல எல்லா வித்தைகளை கற்றிருக்க வேண்டும். நடைமுறையை அரசியலை செய்யாததால் நான் தொடரந்து 2 முறை வெற்றி பெற்று 3 முறை தோற்றேன்.
நான் பாஜக உறுப்பினர் பதவி ராஜினாமா செய்த போதும் அண்ணாமலை, வானதியை சந்தித்து பேசினேன். அப்போது அண்ணாமலையிடம் நான் கூறுவதை இன்றாவது கேளுங்கள் என கூறினேன். நீங்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என நான் நினைக்கிறேன். எனது தனிபட்ட கொள்கைகளை புகுத்தியதால் நான் தோல்வியடைய நேர்ந்தது.