கோவையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, என்பிஆர் எந்த விதத்திலும் உதவி செய்யாது, இதை வைத்து காழ்ப்புணர்வு கொண்ட கட்சிகள் மக்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கும். சிஏஏ, என்ஆர்சி ,என்பிஆர் ஆகியவற்றை மத்திய அரசு கைவிடவேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
’அய்யாவழி பாலமுருகன் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டிக்கிறேன்’ - caa protest
கோவை: வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கோவையில் அய்யாவழி பாலமுருகனை கைது செய்ததை கண்டிப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
அய்யாவழி பாலமுருகன் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டிக்கிறேன்
போராடுபவர்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறை செயல்படுகிறது. வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இன்று கோவையில் அய்யாவழி பாலமுருகனை கைது செய்திருப்பதை கண்டிக்கிறேன். பாஜக தலைவர்களான ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறுபான்மை மக்கள் மீது வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என தெரிவித்தார்.